தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி?

விருதுநகரில் தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி?
Published on

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் ஆஷா (வயது 33). இவர் நேருஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மேனகா (24), மாரீஸ்வரி (33), கலைச்செல்வி (43) ஆகிய 3 பேரும் கவுன்சிலர் ஆஷாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆஷா, விருதுநகர் மேற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் தன்னை அவதூறாக பேசியதால் மன வேதனையடைந்த கவுன்சிலர் ஆஷா, வீட்டில் இருந்தபோது துப்புரவு பணிக்கான திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com