காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
Published on

உப்பிலியபுரம், மார்ச்.30-
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரம் பள்ளர் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 20). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சந்துரு அந்த மாணவியை காதலிக்க சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி உள்ளார். மேலும் தனது காதலை ஏற்க மறுத்தால் கொன்று விடுவேன் என மிரட்டினாராம். இதனால் வேதனை அடைந்த மாணவி எலி மருந்து (விஷம்) தின்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் மயங்கி விழுந்த மாணவியை ஆசிரியர்கள் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி மாணவியை மிரட்டிய சந்துரு மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com