கவனம் ஈர்க்கும் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புதிய போஸ்டர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
கவனம் ஈர்க்கும் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புதிய போஸ்டர்
Published on

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com