ஆட்டோ கவிழ்ந்து வங்கி உதவி பெண் மேலாளர் பலி

நவி மும்பையில் 15 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து வங்கி உதவி பெண் மேலாளர் பலியானார்.
ஆட்டோ கவிழ்ந்து வங்கி உதவி பெண் மேலாளர் பலி
Published on

மும்பை,

நவிமும்பையை சேர்ந்த 10 பேர் சுற்றுலாவிற்காக அலிபாக் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றனர். இந்த ஆட்டோவில் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த 25 வயது பெண் உடன் சென்றார். மாண்டுவா-அலிபாக் நெடுஞ்சாலை ரகாட்லே கிராமம் அருகே ஆட்டோ சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஆட்டோ சாலையில் தாறுமாறாக சென்று சாலையோரமாக இருந்த 15 அடி கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனர். உதவி பெண் மேலாளர் படுகாயமடைந்ததால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்சு மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உதவி பெண் மேலாளர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com