ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருக, ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

ஆட்டோ டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் குருசாமி (வயது 58). ஆட்டோ டிரைவர்.

நேற்று மதியம் மெய்த்தலைவன்பட்டி கிராமத்தில் முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்குக்கு ஆட்களை ஆட்டோவில் ஏற்றிச்சென்றார்.

அந்த வீட்டிற்கு சென்று ஆட்களை இறக்கி விட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பலி

மெய்த்தலைவன்பட்டி விலக்கில் வந்தபோது நாற்கரச்சாலையில் திடீரென சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குருசாமி உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன குருசாமிக்கு காளியம்மாள் என்ற மனைவியும் கருப்பசாமி, ராஜா, முருகன், ஆகிய 3 மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com