ஆடி கியூ 5 லிமிடெட் எடிஷன்


ஆடி கியூ 5 லிமிடெட் எடிஷன்
x

சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் கியூ 5 மாடலில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.69.72 லட்சம். ஆடி நிறுவனத் தயாரிப்புகளில் கியூ 5 மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இதில் கருப்பு மற்றும் காபி பிரவுன் நிறங் களில் லிமிடெட் எடிஷன் வந்துள்ளது.

2 லிட்டர் 4 சிலிண்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜினைக் கொண்ட இந்த கார் 265 ஹெச்.பி. திறனையும், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் சொகுசான பயணத்துக்கு அடாப்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு 8 ஏர்பேக்குகள் உள்ளன. நான்கு சக்கர சுழற்சி கொண்ட இதில் 6 விதமான ஓட்டும் நிலைகள் (கம்பர்ட், டைனமிக், இன்டிவியூஜூவல், ஆட்டோ, எபீசியன்ஸி, ஆப்-ரோட்) உள்ளன.

கண்ணாடியாலான மேற்கூரை, சாவி தேவைப்படாத நுட்பம், பார்க் அசிஸ்ட், முன்னிருக்கை, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3 நிலை ஏர் கண்டிஷனிங் வசதி, 25.65 செ.மீ. தொடு திரை ஆகிய வசதிகளைக் கொண்டது.

முப்பரிமாண இசைக்கு 755 வாட் திறனை வெளிப்படுத்தும் 19 ஸ்பீக்கர்கள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு வந்துள்ள இந்த லிமிடெட் எடிஷன் காருக்கு வரவேற்பு பெருமளவில் இருக்கும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.


Next Story