பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்


பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்
x

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எம் 1000 ஆர், பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் காம்படீஷன் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எம் 1000 ஆர், பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் காம்படீஷன் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. மோட்டராட் பிரிவில் இது இரண்டாவது புதிய மாடலாகும்.

வெள்ளை, கருப்பு மெட்டாலிக் பெயிண்ட்களில் வெளிவந்துள்ளது. ஸ்போர்ட் ரக மோட்டார் சைக்கிளுக் குரிய மெல்லியதான ஏரோ டைனமிக் வடிவமைப்பு, உறுதி யான பாகங்கள், மிகச் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட 4 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இது 999 சி.சி. திறனை வெளிப்படுத்தும். 212 ஹெச்.பி. திறனை 14,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 11 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சி யிலும் வெளிப்படுத்தும். இதனால் ஸ்டார்ட் செய்த 3.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 280 கி.மீ. ஆகும்.

முன்புறம் 6.5 அங்குல டி.எப்.டி. திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி உள்ளது. அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்கு, அடாப்டிவ் இன்டிகேட்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏ.பி.எஸ். மற்றும் எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் விற்பனையக விலை சுமார் ரூ.33 லட்சம். பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் காம்படீஷன் விற்பனையக விலை சுமார் ரூ.38 லட்சம்.


Next Story