கேலக்ஸி எஸ் 23 எப்.இ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி மாடலில் எஸ் 23 எப்.இ. ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி எஸ் 23 எப்.இ ஸ்மார்ட்போன்
Published on

இதன் விலை சுமார் ரூ.59,999 முதல் ஆரம்பமாகிறது. இதில் 6.4 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் திரை உள்ளது. ஆக்டாகோர் சாம்சங் எக்ஸினோஸ் 2200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உடையது. பின்புறம் 50 மெகாபிக்ஸெல் கேமரா, முன்புறம் 10 மெகா பிக்ஸெல் கேமரா, திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 25 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.64,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com