நோக்கியா மடக்கும் மாடல் செல்போன் அறிமுகம்

நோக்கியா மடக்கும் மாடல் செல்போன் அறிமுகம்
Published on

நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. நிறுவனம் புதிதாக மடக்கும் வகையிலான பிளிப் மாடல் செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 2660 என்ற பெயரில் பல கண்கவர் வண்ணங்களில் (கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை) இவை அறிமுகமாகியுள்ளன. இவற்றில் 2.8 அங்குல திரை உள்ளது. 1450 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. பேசுபவரின் குரல் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதில் யுனிசாக் டி 107 சிங்கிள் கோர் பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. 48 எம்.பி. ரேம், 128 எம்.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 32 ஜி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதன் விலை சுமார் ரூ.4,699.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com