மினி ஷாடோ எடிஷன்


மினி ஷாடோ எடிஷன்
x

பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மினி கூப்பர் மாடலில் தற்போது ஷாடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 24 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது முழுவதும் கருப்பு நிறத்தில் வந்துள்ளது. மேற்கூரை மட்டும் சில்வர் நிறத்தில் இருக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.49 லட்சம்.

இதில் 18 அங்குல ஸ்போக் அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இது 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் உள்ள டர்போ தொழில்நுட்பம் 178 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,600 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 100 கி.மீ. வேகத்தை 7.5 விநாடிகளில் தொட்டுவிடும் இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 225 கி.மீ. இதில் 7 ஆட்டோ மேடிக் கியர் வசதி, இரண்டு விதமான ஓட்டும் நிலைகள், டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, பிரேக் அசிஸ்ட், விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


Next Story