ரூ.2.65 லட்சத்தில்...புதிய அல்ட்ரா வயலெட் எக்ஸ்-47 வெனம்

7.5 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி, 11 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி என இரு வேறு வகைகளில் கிடைக்கும்.
புதிய அல்ட்ராவயலெட் எக்ஸ்-47 வெனம்
Published on: 

பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனம். புதிய வி.எக்ஸ்-100 தளத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்-47 வெனம் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. 7.5 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.2.65 லட்சம். 11 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி கொண்ட உயர்நிலை மாடலின் விலை ரூ.4.12 லட்சம்.

7.5 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி, 11 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி என இரு வேறு வகைகளில் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் முறையே 227 கி.மீ., 343 கி.மீ. தூரம் பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மாடலில் 7 அங்குல தொடு திரை, குரூஸ் கண்ட்ரோல், கேமரா உதவியுடன் வாகனத்தை நிறுத்தும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரட்டை சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

உயர்நிலை வகைகளில் ரேடார் உதவியிலான பாதுகாப்பு அமைப்பு. டேஷ்கேம் போன்ற கூடுதல் வசதிகள் கிடைக்கும். மொத்தம் நான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த பைக்குக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

X