விமான சாகச நிகழ்ச்சி

தசரா விழாவையொட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். மைசூரு தசரா விழா
விமான சாகச நிகழ்ச்சி
Published on

மைசூரு, அக்.

தசரா விழாவையொட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி மைசூரு நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மலர் கண்காட்சி, உணவு மேளா, இளைஞர் தசரா, மகளிர் தசரா, விவசாய தசரா, மல்யுத்த போட்டி, கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், கலா குழுவினரின் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மைசூருவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டு களைகட்டி உள்ளது. மேலும் தெருவோர வியாபாரிகளுக்கு வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் சாலையோரங்களில் புதிய, புதிய கடைகளாக முளைத்துள்ளன.

விமான சாகச நிகழ்ச்சி

இந்த நிலையில் மைசூரு தசரா விழாவையாட்டி இந்த ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடத்த மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அரசிடமும் ஒப்புதல் கேட்கப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த விமான சாகச நிகழ்ச்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.

ஒத்திகை

இந்த நிலையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி நேற்று தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி பற்றி மக்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் திடீரென்று வானில் விமானங்கள் புகையை கக்கியப்படி வட்டமிட்டு சாகசம் செய்வதை பார்த்து முதலில் மக்கள் அதிர்ந்து போயினர். அதன்பிறகு தான் விமான சாகச ஒத்திகை நடப்பது தெரியவந்தது.

சுமார் அரை மணி நேரம் சூரியகிரண் விமானங்கள் வானில் சாகச ஒத்திகை நடத்தின. விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. இதனை மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் நின்று பார்த்து ரசித்தனர்.

தசரா விழாவையொட்டி

மைசூருவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி

நாளையும் நடக்கிறது

மைசூரு, அக்.22-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com