விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலாடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

சாயல்குடி,

கடலாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பஸ் நிலையம், நகரின் முக்கிய இடங்களில் உலக தாய்ப்பால் வார விழா சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் தலைமை தாங்கினார். துண்டுப்பிரசுரம் கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் பண்ணை அரசி, அமுதா ரமணி, வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com