பல், ஈறு பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ

இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூ சாபில் பல், ஈறு பராமாப்பு குறித்து விழிப்புணாவு வீடியோ வெளியிடப்பட்டது.
பல், ஈறு பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ
Published on

பாகூர்

புதுவை அரசு சுற்றுலா துறை- பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லூரி இணைந்து பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல் மற்றும் ஈறு பராமரிப்பு குறித்த வீடியோ கியூ.ஆர்.கோடு மூலம் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக நிர்வாகி ஆஷா சுரேஷ்பாபு ஆகியோர் இதை வெளியிட்டனர்.

இந்த கியூ.ஆர்.கோடு பேனர்கள் கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஸ்மார்ட் போன்களில் ஸ்கேன் செய்தால் பல் மற்றும் ஈறு நலன் பராமரிப்பு வீடியோக்களை கண்டு பயன்பெறலாம்.

இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியில் ஈறுநோய் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பல் சுத்தம் செய்தல் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com