

புதுச்சேரி
புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலையில் இன்று நடந்தது. கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலை அருகில் இருந்து புறப்பட்ட நடைபயணத்தை புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர்.செல்வமுத்து தலைமை தாங்கினார்.
நடைபயணத்தில் புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி சென்றனர். நடைபயணம் தலைமை செயலகம் முன்பு நிறைவு பெற்றது.