கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
Published on

நெட்டப்பாக்கம்

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ராமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துறையின் திட்ட இயக்குனர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சிவகாமி வரவேற்றார். வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி கார்த்திகேசன், செயற்பொறியாளர் கார்த்திகேயன், நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர்கள் பிரமீளா, மணிமாறன், ஹெலன், சித்த மருத்துவ அதிகாரி சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெட்டப்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, பலகாரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொம்மலாட்டம், சிறுமிகளின் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சத்தான உணவு தானியங்கள், காய்கறிகள் கண்காட்சி இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை வரலட்சுமி, ராமலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் முருகன், செயலாளர் செங்கதிர் மற்றும் மகளிர் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com