குளிர் காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் கதவுகள் மூடல்

பத்ரிநாத் கோவிலின் நடை கடந்த மே மாதம் 4-ந்தேதி திறக்கப்பட்டது.
குளிர் காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் கதவுகள் மூடல்
Published on

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இதன்படி உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள சார் தாம் யாத்திரை தளங்களில் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் நடை கடந்த மே மாதம் 4-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்கு யாத்திரையாக சென்று சிவபெருமானை வழிபாடு செய்தனர். இந்த நிலையில், எதிர்வரும் குளிர் காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் கோவிலின் கதவுகள் வருகிற நவம்பர் 25-ந்தேதி அன்று மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com