வங்கி பெண் ஊழியரிடம் கத்தி முனையில் 11 பவுன் வழிப்பறி; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சிங்கம்புணரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வங்கி பெண் ஊழியரிடம் கத்திமுனையில் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வங்கி பெண் ஊழியரிடம் கத்தி முனையில் 11 பவுன் வழிப்பறி; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

சிங்கம்புணரி,

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் வருண். இவருடைய மனைவி சிவசந்தியா (வயது27). வருண் காளையார்கோவிலில் உள்ள பாண்டியன் வங்கியிலும், சிவசந்தியா திருப்பத்தூர் பாண்டியன் வங்கியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிவசந்தியா தனது வங்கி பணி சம்பந்தமாக நெற்குப்பையில் உள்ள வங்கி கிளைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

சிங்கம்புணரியை அடுத்த திருக்களாப்பட்டி அருகே வந்த போது, பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் சிவசந்தியாவின் இருசக்கர வாகனத்தின் மறித்து அவரை கீழே தள்ளினர். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை விட்டு இறங்கி சிவசந்தியாவை கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவசந்தியாவிற்கு பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து எஸ்.வி மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com