ஆற்காட்டில் தேனீக்கள் கொட்டி டேங்க் ஆபரேட்டர் பலி

ஆற்காட்டில் தேனீக்கள் கொட்டி டேங்க் ஆபரேட்டர் பலியானார்.
ஆற்காட்டில் தேனீக்கள் கொட்டி டேங்க் ஆபரேட்டர் பலி
Published on

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 50). இவர் ஆற்காடு நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் அன்பு மற்றும் அவருடன் வேலை செய்யும் தினகரன், சீனிவாசன் ஆகிய 3 பேரும் ஆற்காடு பூபதி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேனீக்கள் 3 பேரையும் சரமாரியாக கொட்டியுள்ளது.

உடனடியாக அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அன்பு பரிதாபமாக உயிரிழந்தார். தினகரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com