இரும்புச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை

கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.
இரும்புச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை
Published on

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கருப்புக் கொண்டைக்கடலையைத்தான் கூறுவர்.

உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு. கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான போலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட கருப்புக்கடலையில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது.

இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

சிறுநீர்ப்பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு. இளம் கொண்டைக்கடலைக்குக் காமம் பெருக்கும் தன்மையும் உள்ளதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com