திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன்

திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த படத்தில், பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார்.
திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன்
Published on

எம்.சக்திவேல் கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். ஜி.டில்லிபாபு தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:

இந்த கதையை டைரக்டர் என்னிடம் சொன்னபோது, அதன் பின்புலமும், கதை நகரும் விதமும் மிகவும் புதிதாக இருந்தது. மொத்த கதையும் ஒரு காற்றாலையை சுற்றி இருந்தது. அழுத்தமான கதையமைப்பும், மர்மங்களும் கலந்து இருந்தன.

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com