பாரதியார் நினைவு தினம்

மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இலக்கியத்துறை சார்பாக பாரதியாரின் 101-வது நினைவு தினம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பாரதியார் நினைவு தினம்
Published on

புதுச்சேரி

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இலக்கியத்துறை சார்பாக மகாகவி பாரதியாரின் 101-வது நினைவு தினம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குனரும் முதல் வருமான வெங்கடாசலபதி, அறிவியல் கல்லூரியின் டீன் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். பாரதியாரின் கல்வி சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் கருணாநிதி பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், அறிவழகன், ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், தமிழ் துறை தலைவர் ராஜேந்திரன், வனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com