பா.ஜ.க. பேனர்கள் அகற்றம்

புதுவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பா.ஜ.க. பேனர்கள் அகற்றப்பட்டது.
பா.ஜ.க. பேனர்கள் அகற்றம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் பேனர், கட்-அவுட் வைக்க தடை உள்ளது. உரிய அனுமதி பெற்று ஒருசில இடங்களில் மட்டும் பேனர்கள் வைக்க நகராட்சிகள் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் தலைவர் வருகை, பிறந்தநாள், திருமணம் உள்ளிட்டவைகளுக்கு நகரின் முக்கிய சந்திப்புகள், சாலையோரங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இவற்றை நகராட்சி அதிகாரிகள் அகற்றுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகையொட்டி புதுவையில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை இன்று புதுவை நகராட்சி ஊழியர்கள், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com