தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் வளராது முத்தரசன் பேட்டி

பா.ஜ.க. தமிழகத்தில் ஒருபோதும் வளராது என்று முத்தரசன் கூறினார்.
தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் வளராது முத்தரசன் பேட்டி
Published on

புதுக்கோட்டை,

தமிழகத்தில் பா.ஜ.க. கட்சியை வளர்க்க அ.தி.மு.க.வை மிரட்டி குரல்வளையை நெரித்து தேர்தலில் அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப்பினும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒருபோதும் வளராது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளது. இடம் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை பேசவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். தி.மு.க. கூட்டணியில் 9 கட்சிகள் இருப்பினும் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில கருத்துக்களை கூறிவருவது ஏன் என்று புரியவில்லை.

கமல் ஹாசன், தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று கூறிய பிறகு காங்கிரஸ் தலைவர் அழகிரி கமல்ஹாசன் கூட்டணியில் சேரவேண்டும் என்று கூறியது ஏன் என்று தெரியவில்லை. கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார், அவருக்கு மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் பல கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துகள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com