மராட்டிய மேல்-சபை தேர்தல்; பா.ஜனதா- சிவசேனா வேட்பாளர்கள் மனு தாக்கல்

மராட்டிய மேல்-சபை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா சார்பில் பங்கஜா முண்டேக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
மராட்டிய மேல்-சபை தேர்தல்; பா.ஜனதா- சிவசேனா வேட்பாளர்கள் மனு தாக்கல்
Published on

மும்பை, 

மராட்டிய மேல்-சபை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா சார்பில் பங்கஜா முண்டேக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள்

மராட்டிய மேல்-சபையில் எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர், மந்திரி சுபாஷ் தேசாய், பிரசாத் லாட் உள்ளிட்ட 10 உறுப்பினர்களின் (எம்.எல்.சி.) பதவி காலம் முடிய உள்ளது. இதையடுத்து 10 எம்.எல்.சி.களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்தநிலையில் இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சார்பில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர், ராம் ஷிண்டே, ஸ்ரீகாந்த் பாரதியா, உமா கம்ரே, பிரசாத் லாட் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் பிரவின் தாரேக்கர், பிரசாத்லாட், ராம் ஷிண்டே, ஸ்ரீகாந்த் பாரதியா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். உமா கம்ரே நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பங்கஜாவுக்கு வாய்ப்பு மறுப்பு

முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேக்கு கடந்த முறை எம்.எல்.சி. பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல முன்னாள் மந்திரி வினோத் தாவ்டேவின் பெயரும் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட பரிசீலிக்கப்படவில்லை.

தற்போது பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் 4 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்ய முடியும். 5-வது வேட்பாளரை வெற்றி பெற வைக்க அவர்களுக்கு சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com