சமந்தாவின் கருப்பு வெள்ளை வீடியோ

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின், கருப்பு வெள்ளை வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தாவின் கருப்பு வெள்ளை வீடியோ
Published on

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்லுறியா பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. இதையடுத்து சுவிட்சர்லாந்தில், சமந்தா பனிச்சறுக்கு செய்யும் வீடியோ வைரலானது.

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com