

புதுச்சேரி
பிரதமர் நரேந்திரமோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செல்வகணபதி எம்.பி. அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முகாமில் பிரதமரின் மோடியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
அவர்களிடம் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் டாக்டர் டயானா தலைமையிலும், அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரும் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.