திருச்சி விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காரைக்குடி பெண் சிக்கினார்.
பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது எடுத்த படம்
பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது எடுத்த படம்
Published on

செம்பட்டு

திருச்சி விமானநிலையம்

சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் திகழ்கிறது. மேலும் அதிக வருவாய் ஈட்டுவதிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போது, இங்கு ரூ.950 கோடியில் புதிய முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் ஓடுதள சீரமைப்பு பணி நடைபெற்றுவருவதால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விமான சேவை கிடையாது. மற்ற நேரங்களில் வழக்கம்போல் விமானசேவை உண்டு. இந்த நிலையில் நேற்று காலையில் முனைய மேலாளர் ஆல்பர்ட் பணியில் ஈடுபட்டு காண்டிருந்தார்.

வெடிகுண்டு மிட்டல்

அப்போது, முனைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண், விமானநிலைய முனையத்துக்குள் குற்றவாளிகளை சிறப்பு அனுமதி வழங்கி அனுப்பி வைப்பது தவறு என்றும், அதிகாரிகளை நியமிப்பது எந்த அடிப்படையில் என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு, முனைய மேலாளர் இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என பதில் அளித்தார். இதனிடையே, அந்த பெண் இதே நிலை தொடர்ந்தால் விமான நிலையத்தின் மீது குண்டு வீசப்படும் என மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனைய மேலாளர் ஆல்பர்ட் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிஷ் சிங் நயால் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

தனிப்படை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வெடிகுண்டு சோதனை குழு மற்றும் மோப்பநாய் குழுவினர் உடனடியாக விமானநிலையத்துக்கு விரைந்து வந்தனர். விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானநிலையம் முழுவதும் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் குறித்து விமானநிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண் சிக்கினார்

விசாரணையில், விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நாகராஜ் மகள் பத்மாவதி என தெரியவந்தது. இவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com