மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

அரியாங்குப்பத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
Published on

அரியாங்குப்பம் 

அரியாங்குப்பத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மின்சாரம் தாக்கியது

அரியாங்குப்பம் சண்முகம்நகர் துரைசிங்கம் வீதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 36). இவரது மூத்த மகன் வீரமணிகண்டன் என்கிற சிம்பு (வயது 16). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தான்.

நேற்று மாலை மணிகண்டன் தனது வீட்டு மொட்டை மாடியில் வைத்து மூங்கில் குச்சியால் தூண்டில் செய்துள்ளான். அப்போது வீட்டையொட்டி சென்ற மின்கம்பியின் அருகில் வீரமணிகண்டன் சென்றதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவன் தூக்கி வீசப்பட்டான்.

சாவு

இதை பார்த்த அய்யம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீரமணிகண்டனை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வீரமணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com