கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

புதுவை புட்டலாய் அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

புதுச்சேரி

புதுவை காமராஜர் சாலை ராஜய்யர் தோட்டம் பகுதியில் புட்டலாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 56) நிர்வகித்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு வேல்முருகன் வீட்டிற்கு சென்றார். மறுநாள் கோவிலை திறக்க வந்தபோது, வெளியே வைக்கப்பட்டிருந்த சிறிய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்த நபரை தேடி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 6 மாதம் முன்பு இதே கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com