கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

புதுச்சேரி

புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உண்டியல் உடைப்பு

புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள ராஜாநகர் அய்யனார் கோவில் வீதியில் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோவில் பூஜைகள் முடிந்து கோவில் அறங்காவலர் குழு பொருளாளர் செல்வராஜ், பூசாரி ராஜநாராயணன் ஆகியோர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலை ராஜநாராயணன் கோவிலை திறந்து பார்த்தார். அப்போது கோவிலில் திரிசூலத்தின் அருகில் இருந்த 3 அடி உயரஉண்டியலை காணவில்லை. இதுதொடர்பாக அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

அவர்கள் வந்து பார்த்தபோது, உண்டியல் கோவிலின் பின்புறம் உள்ள புற்று பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக செல்வராஜ், உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com