தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2023 10:51 AM IST (Updated: 26 March 2023 10:59 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பாக, காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரகம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை, வணியம்பாடி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story