5-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு


5-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி:  மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 July 2023 5:56 AM GMT (Updated: 26 July 2023 6:11 AM GMT)

மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால், 5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி 5-வது நாளாக நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும். பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் வழக்கம்போல் 11 முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிப்பூர் விவகாரம் பேசப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

கார்கில் போர் - நாடாளுமன்றத்தில் அஞ்சலி

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரமரணமடைந்த வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story