மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு


மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 6 Dec 2023 10:12 AM GMT (Updated: 6 Dec 2023 10:44 AM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்தநிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இத்தகையசூழலில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story