அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை - பிரதமர் மோடி அறிவுறுத்தல்
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி:
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை ஆய்வு செய்து, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனை மிஷன் மோட் எனப்படும் வேக கதியில் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதாவது இதை விரைந்து முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்தோர் மற்றும் புதிதாக பட்டம் பெறுவோருக்கு பெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.
Related Tags :
Next Story