வீட்டு கதவு பூட்டை உடைத்து திருட்டு

வேப்பூர் அருகே வீட்டு கதவு பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டு கதவு பூட்டை உடைத்து திருட்டு
Published on

வேப்பூர்,

வேப்பூர் அருகே பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு மனைவி முனீஸ்வரி (வயது 32), இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு, மாளிகை மேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், முனீஸ்வரி வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை ஆகியவற்றை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com