ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு போனது
ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
Published on

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 60). இவருடைய மனைவி ராசம்மாள். இவர்கள் 2 பேரும் கடந்த 18-ந்தேதி திண்டுக்கல்லில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் கீழ ஆம்பூருக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

செல்லப்பாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீடுபுகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com