புதுச்சேரியில் இளங்கலை நர்சிங் பொது நுழைவுத் தேர்வு ரத்து - இந்திய செவிலியர் கவுன்சில் அறிவிப்பு

புதுச்சேரியில் 2023-24ம் கல்வியாண்டில் இளங்கலை நர்சிங் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இளங்கலை நர்சிங் பொது நுழைவுத் தேர்வு ரத்து - இந்திய செவிலியர் கவுன்சில் அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

நடப்பு கல்வியாண்டியில் இளங்கலை நர்சிங் படிப்பிற்கு புதுச்சேரியில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என இந்திய செவிலியர் கவுன்சில் உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தற்போது புதுச்சேரியில் மட்டும் 2023-24ம் கல்வியாண்டில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய செவிலியர் கவுன்சில் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com