பி.எஸ்.என்.எல். சிம் காடு விற்பனை முகாம்

புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். சிம் காடு விற்பனை முகாம் நகர பகுதிகளில் 5 நாட்கள் நடக்கிறது.
பி.எஸ்.என்.எல். சிம் காடு விற்பனை முகாம்
Published on

புதுச்சோ

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் சிம் கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், வில்லியனூர், ஏம்பலம் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில், காலாப்பட்டு முருகன் கோவில் அருகில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இந்தியன் வங்கி அருகில், மடுகரை, அரும்பார்த்தபுரம், வில்லியனூர் பைபாஸ் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம், எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் கார்டு ரூ.50-க்கு வழங்கப்படுகிறது.

முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசமாக அனுப்பலாம். இதர நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் அதிவேக இண்டாநெட் பாரத் பைபா நுழைவு பிளான் ரூ.329-க்கு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com