எருது விடும் விழா

ஆம்பூர் அருகே எருது விடும் விழா நடந்தது.
எருது விடும் விழா
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் சான்றோர்குப்பம் பகுதியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வில்வநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. காளைகளை வாடிவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு விடப்பட்டன. இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தாசில்தார் பழனி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com