

வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றது இதில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், வேலூர் மாவட்டம், உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கடும் வெயிலிலும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து எருது விடும் விழாவை கண்டுகளித்தனர்.
இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் ஓடிய காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட்டது.
காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினரை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை கண்காணித்தனர்.