

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இதில் பாலக்காடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்பேது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் போது கூட்டத்திற்குள் புகுந்த காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் 2 போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.