தனியார் ஆலையில் தீ விபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி பலி

தனியார் ஆலையில் தீ விபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி பலி
Published on

மும்பை, 

பால்கர் மாவட்டம் தாராப்பூர் எம்.ஐ.டி.சி.யில் உள்ள ஆலையில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஆலையில் இருந்த 2 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஐரோலி தீக்காய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் 60 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திர கவுதம் (வயது28) என்ற தொழிலாளி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பால்கர் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைமை அதிகாரி விவேகானந்த் கதம் கூறுகையில், "தாராப்பூர் எம்.ஐ.டி.சியில் பகுதியில் உள்ள ஆலையில் நடந்த தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்துவிட்டார்" என்றார்.

ஆலையில் நடந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com