

மும்பை,
புல்தானா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. விஜய்ராஜ் ஷிண்டே (வயது58) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் அமராவதி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். மதியம் 12 மணி அளவில் அகோலா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை குரான்கேட் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த பஸ் ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட காரில் இருந்த 4 பேர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அகோலாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.