கடந்த 11 மாதங்களில் 24 கோடி வாகனங்கள் பதிவு

கடந்த ஜனவரி மாதம் 27 லட்சத்து 22 ஆயிரத்து 558 வாகனங்கள் பதிவாகியிருந்தன.
கடந்த 11 மாதங்களில் 24 கோடி வாகனங்கள் பதிவு
Published on

சென்னை,

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த மாதம் நாடு முழுவதும் பதிவாகிய வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதம் 17 லட்சத்து 505 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 130 ஆட்டோக்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 768 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 1 லட்சத்து 820 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 89 ஆயிரத்து 418 டிராக்டர்கள் உள்பட 24 லட்சத்து 9 ஆயிரத்து 362 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய மாதத்தைவிடவும் 11.50 சதவீதம் குறைவு ஆகும்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் 27 லட்சத்து 22 ஆயிரத்து 558 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் நாடு முழுவதும் 2 கோடியே 69 லட்சத்து 52 ஆயி ரத்து 913 வாகனங்கள் பதிவாகியிருக்கிறது. இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டு 2 கோடியே 40 லட்சத்து 38 ஆயிரத்து 20 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு 12.13 சதவீத வாகனங்கள் அதிகரித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com