3 ஆண்டு கால ‘மெகா’ ரீசார்ஜ் திட்டம்: அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ

இந்த திட்டத்தின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினாலும், இந்தத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது .
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ
Published on: 

இந்திய டெலிகாம் சந்தையில் 524 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய மொபைல் மற்றும் முன்னணி டிஜிட்டல் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ , நீண்டகால பயனர்களுக்காக தற்போது ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தொலைத்தொடர்பு துறையிலேயே முதன்முறையாக 3 ஆண்டுகள் (1,095 நாட்கள்) செல்லுபடியாகும் புதிய அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்களாக தினசரி 2.5 ஜி.பி. அதி வேக தடையற்ற 5ஜி டேட்டா. தடையற்ற இலவச அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ ஹாட்ஸ்டார், 12 மாத கான்வா புரோ லைட் மற்றும் 50 ஜி.பி. ஜியோ கிளவுட் நினைவகம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இதன் விலை ரூ.10 ஆயிரம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினாலும், இந்தத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது . இந்தத் திட்டத்தின்படி பார்த்தால், ஒரு மாதத்திற்குத் தோராயமாக ரூ. 278 மட்டுமே செலவாகிறது. தினமும் ரூ.9.13 செலவு ஆகும்.

X