

இந்தியாவில் ஆப்பிள் போன்களின் மோகம் விண் ணைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வர லாற்று சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகமாகும்
. இதேபோல், நிறுவனத்தின் நிகர லாபமும் 66 சதவீதம் கிடுகிடு வென உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 311 கோடியாக எகிறி யுள்ளது. ஸ்மார்ட்போன் வருவாயில் முதன்மை போட் டியாளரான சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் பின்னுக் குத் தள்ளியுள்ளதால், அதன் ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.