இன்று நடைபெறும் ஆப்பிள் வருடாந்திர நிகழ்வு.. ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் ஆகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
representation image (Grok AI)
representation image (Grok AI)
Published on

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 ஏர் வெளியீடு நேரலை செய்யப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலையைக் காணலாம். மேலும், ஆப்பிள் டிவி வைத்துள்ளவர்கள் அதிலும் நேரலை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com