பெரும் சிக்கலில் பீர் தொழில்; மத்திய அரசு தலையிட கோரிக்கை

ஈரான் போரால் பீர் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்க ளின் விலைஉயர்ந்து விட்டது
AI image
AI image
Published on

ஈரான் போர் காரணமாக பீர் தயாரிப்புக்கான உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதாக யு.பி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேக் குப்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-ஈரான் போரால் பீர் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலைஉயர்ந்து விட்டது. பீர் அடைக்கப் பயன்படுத்தும் கேன் தயாரிக்க தேவையான அலுமினியம் விலையும் அதிகரித்து விட்டது.

வினியோகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. பீர் மீது மாநில அரசுகள் விலை கட்டுப்பாடு விதித்து இருப்பதால், விலையை உயர்த்த முடியவில்லை. எனவே, பீர் தொழில் பெரும் சிக்கலில் இருக்கிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com