ஐபோன், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி.களுக்கு அதிக தள்ளுபடி.. பிளாக் பிரைடே சேல்ஸ் ஆரம்பம்

பிளிப்கார்ட்டில் லேப்டாப் வாங்க விரும்பினால், 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
பிளாக் பிரைடே சேல்ஸ் ஆரம்பம்
Published on

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள பிளாக் பிரைடே சேல்ஸ் எனப்படும் விழாக்கால தள்ளுபடி விற்பனை இப்போது உலக அளவிலான வர்த்தக திருவிழாவாக மாறியிருக்கிறது. இந்தியாவிலும் இந்த தள்ளுபடி விற்பனைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை பிளாக் பிரைடே சேல்ஸ் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-காமர்ஸ் தளங்கள் நம்ப முடியாத விலையில் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளன.

ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் மற்றும் புதுவரவு கேஜெட்களை வாங்குவதற்காக நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பர்களுக்கு பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் பிளாக் பிரைடே சேல்ஸ் நாளை மறுநாள் (24.11.2024) தொடங்கி 29.11.2024 வரை நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து விருப்ப பட்டியலில் இன்றே வைக்கலாம்.

பிளிப்கார்ட்டின் இந்த பிளாக் பிரைடே சேல்சில், ஐபோன்களை அதிக தள்ளுபடியில் வாங்கலாம். ஐபோன்-15 வகை போனுக்கு அதிகபட்ச தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் Realme P1 Pro 5G, Moto G 85.5 G, Vivo T3 Pro உள்ளிட்ட பல சாதனங்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

லேப்டாப் வாங்க விரும்பினால், 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். டி.வி.கள் மற்றும் உபகரணங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. வாஷிங் மிஷின் அல்லது கீசர் வாங்க வேண்டும் என்றாலும் மலிவாக வாங்கலாம். 

இதேபோல் அமேசான், டாடா கிளிக், மிந்த்ரா, மினிசோ ஆகிய தளங்களிலும் பிளாக் பிரைடே சேல்ஸ் தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com